சன்னிலியோன் சவாலை ஏற்று கொண்ட ஸ்ருதிஹாசன்: வைரல் வீடியோ

சன்னிலியோன் சவாலை ஏற்று கொண்ட ஸ்ருதிஹாசன்: வைரல் வீடியோ

நடிகை சன்னி லியோன் சமீபத்தில் விடுத்த சவாலை ஏற்றுக் கொண்ட ஸ்ருதிஹாசனின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி நடிகை நடிகை சன்னி லியோன் தற்போது தமிழிலும் சில படங்கள் நடித்து வருகிறார் என்பதும் இவர் நடித்துள்ள ’ஓ மை கோஸ்ட்’ என்ற திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

அது மட்டுமின்றி தெலுங்கிலும் ஒரு திரைப்படத்தில் நடிக்க சன்னி லியோன் ஒப்பந்தமாகி உள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் சன்னி லியோன் சமீபத்தில் தலைகீழாக Y என்ற ஆங்கில எழுத்து போல் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை பதிவு செய்து இதே போன்று உங்களால் செய்ய முடியுமா என்று சவால் விடுத்தார். இந்த சவாலை ஏற்று பல ரசிகர்கள் தலைகீழாக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை கமெண்ட்ஸ்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சற்றுமுன் நடிகை ஸ்ருதிஹாசன், சன்னிலியோன் போலவே ஆங்கில Y எழுத்து வொர்க் அவுட் செய்யும் வீடியோவை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இதனையடுத்து அவர் சன்னிலியோனின் சவாலை ஏற்றுக்கொண்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது பிரபாஸ் நடித்துவரும் ’சலார்’ உள்பட 3 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES