பகத் பாசில் -நஸ்ரியாவின் 'நிலை மறந்தவன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பகத் பாசில் -நஸ்ரியாவின் 'நிலை மறந்தவன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரபல மலையாள நடிகரான பகத் பாசில் கடந்த சில ஆண்டுகளாக தென்னிந்திய மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார் என்பதும் குறிப்பாக அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’, கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ ஆகிய சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பகத் பாசில் மற்றும் அவருடைய மனைவி நஸ்ரியா இணைந்து நடித்த மலையாள திரைப்படமான ’ட்ரான்ஸ்’ என்ற திரைப்படம் கேரளாவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் தற்போது தமிழில் ’நிலை மறந்தவன்’ என்ற பெயரில் வெளியாக உள்ளது. இந்த படம் வரும் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான இந்தப் படம் தமிழிலும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கௌதம் மேனன் வில்லனாக நடித்துள்ள இந்த படத்தில் ’விக்ரம்’ படத்தில் நடித்த செம்பான் வினோத், 'திமிரு’ படத்தில் நடித்த விநாயகன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ’உஸ்தாத் ஹோட்டல்’ என்ற படத்தை இயக்கியவரும் ’பிரேமம்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்தவருமான இயக்குனர் அன்வர் ரஷீத் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News