'விருமன்' முத்தையாவின் அடுத்த படத்தின் ஹீரோ இந்த பிரபலமா?

'விருமன்' முத்தையாவின் அடுத்த படத்தின் ஹீரோ இந்த பிரபலமா?

கார்த்தி மற்றும் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர் நடிப்பில் உருவான ’விருமன்’ படத்தை இயக்கிய இயக்குனர் முத்தையா தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டதாகவும் அவரது படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கும் நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

‘குட்டிப்புலி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின் ’கொம்பன்’ ’மருது’ ‘தேவராட்டம்’ உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் இயக்குனர் முத்தையா. இவர் இயக்கிய ’விருமன்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் முத்தையா இயக்கும் அடுத்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாக தெரிகிறது. இந்த படத்தில் ஹீரோவாக பிரபல நடிகர் ஆர்யா நடிக்க உள்ளார். வழக்கம்போல் இந்த படமும் மதுரையை அடுத்த ஒரு கிராமம் ஒன்றில் நடக்கும் கதை என்றும் இந்த படத்தை எடுத்து ’யானை’ படத்தை தயாரித்த டிரம்ஸ்டிக் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்திற்கான லொகேஷன் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

LATEST News

HOT GALLERIES