அட்லி படத்திற்கு முன்பே ரிலீஸாகும் ஷாருக்கான் படம்: ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

அட்லி படத்திற்கு முன்பே ரிலீஸாகும் ஷாருக்கான் படம்: ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

பிரபல இயக்குனர் அட்லி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’ஜவான்’. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் 2ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ஷாருக்கான் நடித்துள்ள மற்றொரு திரைப்படம் ஜனவரி மாதமே வெளியாகும் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாருக்கான் நடிப்பில் உருவாகிவரும் பிரம்மாண்டமான திரைப்படம் ’பதான்’. இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் ஷாருக்கான் ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். மற்றொரு முக்கிய கேரக்டரில் ஜான் ஆபிரகாம் நடித்துள்ளார். இந்த படம் யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பு என்பதும் சித்தார்த் ஆனந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

HOT GALLERIES