என் முதல் ஹீரோவுடன் 32 ஆண்டுகள் கழித்து நடிக்கின்றேன்: நடிகை மீனா

என் முதல் ஹீரோவுடன் 32 ஆண்டுகள் கழித்து நடிக்கின்றேன்: நடிகை மீனா

32 ஆண்டுகள் கழித்து என்னுடைய முதல் ஹீரோவுடன் மீண்டும் நடிக்கிறேன் என நடிகை மீனா வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த 1982ஆம் ஆண்டு முதல் குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் நடிகை மீனா அதன்பின் நாயகியாக தமிழ் தெலுங்கு உள்பட பல மொழிகளில் நடித்துள்ளார் என்பதும் கடந்த 90 களில் கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு உள்பட பல பிரபலங்களுடன் நடித்து பிஸியாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பழம்பெரும் தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் உடன் இணைந்து தற்போது நடிகை மீனா ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ’32 ஆண்டுகள் கழித்து என்னுடைய முதல் ஹீரோவுடன் நான் மீண்டும் இணைந்து நடிக்கிறேன்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது .

கடந்த 1990ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ’நவயுகம்’ என்ற திரைப்படத்தில் நடிகை மீனா நாயகியாக அறிமுகமானார் என்பதும் அந்த படத்தில் ராஜேந்திர பிரசாத்துக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார். இந்த நிலையில் 32 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

HOT GALLERIES