ஷாருக்கான் - அட்லி படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமை இத்தனை கோடியா?

ஷாருக்கான் - அட்லி படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமை இத்தனை கோடியா?

ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ’ஜவான்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமைக்கான தொகை குறித்த தகவல் வெளியாகி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகிவரும் அதிரடி ஆக்சன் திரைப்படம் ’ஜவான்’. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி உலகம் முழுவதும் இந்த படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது

இந்த நிலையில் திரையரங்குகளில் வெளியான பின்னர் ஓடிடியில் இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்காக நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூபாய் 120 கோடி கொடுத்து இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

ஆனால் அதே நேரத்தில் கமல்ஹாசனின் ’விக்ரம்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையையும் இதே ரூ.120 கோடிக்கு ஹாட்ஸ்டார் வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின.

LATEST News

HOT GALLERIES