'வீட்ல விசேஷம்' படத்தை கலாய்த்த புளூசட்டை: பதிலடி கொடுத்த பச்ச சட்டை பாலாஜி!

'வீட்ல விசேஷம்' படத்தை கலாய்த்த புளூசட்டை: பதிலடி கொடுத்த பச்ச சட்டை பாலாஜி!

ஆர்ஜே பாலாஜி நடித்த ’வீட்ல விசேஷம்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த படத்திற்கு குடும்ப ஆடியன்ஸ்கள் திரையரங்குகளில் குவிந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் பல திரையரங்க உரிமையாளர்கள் வார இறுதியில் இந்த படம் நல்ல வசூலை பெற்றதாகவும் வார நாட்களில் கூட ஓரளவு வசூலை பெற்று வருவதாகவும் பேட்டி அளித்துள்ளனர்.

இந்த நிலையில் ரஜினி, கமல், அஜித், விஜய் என எந்த பெரிய நடிகர்களின் படங்கள் என்றாலும் அந்த படத்தை கலாய்த்து விமர்சனம் செய்யும் புளூ சட்டை மாறன் ’வீட்ல விசேஷம்’ படத்தையும் தனது பாணியில் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். ஒரு நல்ல ஹிந்தி படத்தை எந்த அளவுக்கு கெடுக்க வேண்டும் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம் என்று அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் புளூசட்டை மாறன் விமர்சனத்திற்கு ஆர்ஜே பாலாஜி வீடியோ ஒன்றின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். ’வீட்ல விசேஷம்’ திரைப்படம் யாரை போய் சேர வேண்டும் என்று நாங்கள் நினைத்தோமோ, அவர்களிடம் நன்றாக போய் சேர்ந்திருக்கிறது என்றும், இந்த படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்களும் படம் பார்த்த ரசிகர்களும் இந்த படத்தை சிறப்பாக பேசி வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

எனவே எந்த பச்சை சட்டைக்க்கு பிடிக்க வேண்டும் என்று நினைத்தோமோ அவர்களூக்கு பிடித்துள்ளது என்றும், எந்த நீல சட்டைக்கும் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

LATEST News

HOT GALLERIES