விக்ரம் நடிக்கும் 'கோப்ரா' படத்தின் செம போஸ்டர்: இணையத்தில் வைரல்

விக்ரம் நடிக்கும் 'கோப்ரா' படத்தின் செம போஸ்டர்: இணையத்தில் வைரல்

விக்ரம் நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளாக உருவாகி வரும் திரைப்படம் ‘கோப்ரா’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் புதிய போஸ்டர் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் சற்று முன்னர் ‘கோப்ரா’ படத்தின் அட்டகாசமான போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரில் விக்ரமின் கெட்டப் மிகப்பெரிய அளவில் ஆச்சர்யப்படும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், கேஎஸ் ரவிக்குமார், ஆனந்தராஜ், ரோபோ சங்கர், மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில் புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

HOT GALLERIES