ரெண்டும் ஒன்றா சாய்பல்லவி? கண்டனம் தெரிவித்த விஜயசாந்தி

ரெண்டும் ஒன்றா சாய்பல்லவி? கண்டனம் தெரிவித்த விஜயசாந்தி

சமீபத்தில் நடிகை சாய் பல்லவி மத ரீதியிலான சர்ச்சைக்குரிய ஒரு கருத்து தெரிவித்த நிலையில் அவரது கருத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன என்பதை பார்த்தோம்.

சாய்பல்லவிக்கு ஆதரவாக திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா, நடிகை குத்து ரம்யா உள்பட பலரும் கருத்து தெரிவித்த நிலையில் தற்போது நடிகை விஜயசாந்தி, சாய்பல்லவிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியபோது, ‘சாய்பலல்வி தான் கூறிய கருத்துக்களை ஒரு நிமிடம் நிதானமாக சிந்தித்து பார்த்தால் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் அவருக்கு தெரியும்.

ஒரு தாய் தன் மகனை அடித்து கண்டிப்பதற்கும், ஒரு திருடன் அடிப்பதற்கும் வித்தியாசம் இல்லையா? இந்த இரண்டும் ஒன்றாகி விடாது. இதுபோன்ற சென்சிட்டிவான மத விஷயங்களை முழுவதுமாக தெரிந்து கொள்ளாமல் கருத்து தெரிவிக்கக் கூடாது என்று சாய்பல்லவிக்கு அறிவுரை கூறுகிறேன் என்று கூறினார்.

அதுமட்டுமின்றி சாய்பல்லவி நடித்த ’விராட பருவம்’ திரைப்பட தயாரிப்பாளர் இந்த விஷயத்தை தன்னுடைய படத்தின் புரமோஷனுக்கு பயன்படுத்தி வருவதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES