2 முறை திருமணம் செய்த தொழிலதிபருக்கு 3வது மனைவியாகிய சூர்யா பட நடிகை!
2 முறை திருமணம் செய்த தொழிலதிபரை சூர்யா படத்தில் நடித்த நடிகை ஒருவர் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் அமீர் இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடித்த திரைப்படம் ’மௌனம் பேசியதே’. கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் நல்ல வெற்றியைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தவர் நடிகை நேஹா பெண்ட்சே. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி உள்பட பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகை நேஹா பெண்ட்சே தொழிலதிபர் ஷர்துல் பயாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தொழிலதிபர் ஷர்துல் பயாஸ் ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து 2 குழந்தைகளுடன் இருப்பவர் என்பதும் நேஹாவுக்கு இது முதல் திருமணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பிய நிலையில் இதற்கு பல நாட்களாக பதில் சொல்லாமல் இருந்த நேஹா, தற்போது பதில் கூறியுள்ளார். ‘ஒன்றுமில்லாத விஷயத்தை பெரிதாக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றும் மூன்றாம் தாரமாக உலகத்தில் நான் மட்டுமே திருமணம் செய்துகொண்டதாக பலர் பேசுகிறார்கள் என்றும் அது அவரவர்களின் விருப்பம் என்றும் தற்போதைய காலகட்டத்தில் இது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது’ என்றும் தெரிவித்துள்ளார்.