கே.ஜி.எப் 2 திரைவிமர்சனம்

கே.ஜி.எப் 2 திரைவிமர்சனம்

அத்தியாயம் ஒன்று

விரிவாக்கம்

1951ஆம் ஆண்டு, இரவு நேரத்தில் சூர்யவர்த்தனால் கே.ஜி.எப் எனும் தங்க சுரங்கம் கண்டுபிடிக்கப்படுகிறது. அதே இரவில் சாந்தா எனும் பெண்ணுக்கு ராஜ கிருஷ்ண வீரய்யா { யாஷ் } எனும் மகன் பிறக்கிறான். வறுமையில் தனது தாய்யை இழக்கும் ராஜ கிருஷ்ண வீரய்யா, சாகும் பொழுது பணக்காரனாக தான் சாவேன் என்று அம்மாவிடம் செய்து கொடுத்த சத்தியத்திற்காக இந்த உலகையே ஆளவேண்டும் என்று நினைக்கிறார். சிறு வயதிலேயே Brand-ஆக வேண்டும் என்று முடிவு செய்யும் ராஜ கிருஷ்ண வீரய்யா, ஒரு நாள் காவல் துறை அதிகாரியை துணிச்சலாக அடித்து மண்டையை உடைக்கிறார். அப்போதிலிருந்து ராஜ கிருஷ்ண வீரய்யாவாக இருந்த யாஷ், ராக்கி என்று தனது பெயரை மாற்றிக்கொள்கிறார்.

வளர்ந்து மும்பையை தன் கைக்குள் கொண்டுவர சமயத்தில், கே.ஜி.எப் இடத்தை ஆண்டுகொண்டிருக்கும் கருடனை கொள்ளவேண்டும் என்ற அசைன்மென்டிற்கு செல்கிறார். அங்கே செல்லும் ராக்கி, கே.ஜி.எப்பில் அடிபட்டு கிடைக்கும் மக்களை பார்க்கிறார். முதலில் வந்த வேலை தான் முக்கியம், கருடனை எப்படி கொள்வது என்று நினைக்கும் ராக்கி, தீடீரென விஸ்வரூபம் எடுத்து, அங்கிருக்கும் காவலாளிகளை கொன்று மக்கள் மனதில் நமிக்கையை விதைக்கிறார். இதன்பின், கருடனையும் வெட்டி கொலை செய்கிறார்.

கருடனின் இறப்பு, கே.ஜி.எப் இடத்திற்காக ஏங்கும் முக்கிய புள்ளிகளை கே.ஜி.எப் பக்கம் திருப்பிட்டது. கருடன் இருக்கும் வரை கே.ஜி.எப் இடத்திற்கு ஆசைப்படமாட்டேன் என்று கூறிய ஆதிரா. அரசியல் தலைவி ரமிக்கா சென். இனாயத் கலீல் என மூவரும் கே.ஜி.எப் இடத்திற்காக பிணம் தின்னி கழுகுகள் போல் காத்துருக்கிறார்கள். ஆனால் கருடனை கொன்று, அவர்களுக்கு முன் அங்கே, ராக்கி தனது கால்தடத்தை பதிவிட்டார்.

 

கதையின் துவக்கத்தை இதுவரை பார்த்த நாம், அத்தியாயம் இரண்டை பார்ப்போம்.

அத்தியாயம் இரண்டு

கதைக்களம்

கருடனை கொன்ற பிறகு, கே.ஜி. எப்பை தன்கைக்குள் கொண்டு வருகிறார் ராக்கி. ஆனால், அது அங்கிருக்கும் பலருக்கு பிடிக்காமல் போக, ராக்கியை அந்த இடத்தில் இருந்து தூக்க வேண்டும் என்று பல திட்டங்களை தீட்டுகிண்டனர். கே.ஜி.எப்க்கு கருடன் இருக்கும் வரை நான் வரமாட்டேன் என்று சத்தியம் செய்திருந்த ஆதிரா, தற்போது ராக்கியை கொன்று கே.ஜி.எப்பை கைப்பற்ற வருகிறான்.

முதல் முயற்சியில் ராக்கியை வீழ்த்தும் ஆதிரா, ராக்கிக்கு உயிர் பிச்சை அளித்து கொள்ளாமல் விட்டுவிடுகிறான். இதன்பின் சிறிதுகாலம் ஓய்வில் இருக்கும் ராக்கி, சரியான கூட்டணியை இனாயத் கழிலுடன் அமைத்துக்கொண்டு, ஆதிராவை எதிர்க்கிறார். அந்த முயற்சியில் வெற்றியும் பெறுகிறார் ராக்கி. ஆனால், ஆதிராவை கொள்ளாமல், தனது அவர் கொடுத்த உயிர் பிச்சையை மீண்டும் அவனுக்கு கொடுக்கிறார் ராக்கி பாய்.

 

கே.ஜி,எப்பை இந்தியாவே உயர்ந்து பார்க்கும் அளவிற்கு பிரம்மாண்டமாக கட்டி, இந்தியாவை ஆண்டு வரும் டான் ராக்கியை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று முடிவெடும் PM ரமிக்கா சென், அதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடுகிறது. மற்றொரு புறம், நான்கு ஆண்டுகளுக்கு பின் ராக்கியை பழிவாங்க வருகிறான் அதிரா. இந்த அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் ராக்கி தப்பித்தாரா இல்லையா? தன்னை நம்பியிருக்கும் மக்களை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே மீதி கதை.

 

படத்தை பற்றிய அலசல்

முதல் பாகத்தை போலவே மாசான மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் கதாநாயகன் யாஷ். மாஸ் காட்சிகள், வசனங்கள், அம்மா செண்டிமெண்ட் என அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார். கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி, அழகான நடிப்பை அளவாக காட்டியுள்ளார். வில்லன் ஆதிராவாக வரும் சஞ்சய் தத் ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டலாக நடித்துள்ளார்.

PM ரமிக்கா சென் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ரவீனா டாண்டன், கம்பிரமான நடித்து அனைவரும் வியக்கவைத்துள்ளார். ஆனந்த் இளவழகனின் மகனாக வரும் விஜயேந்திர இளவழகன் { பிரகாஷ் ராஜ் } கதை கூறும் விதம், அவருடைய அனுபவ நடிப்பை காட்டுகிறது. மேலும், வானரம் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் அய்யப்பா பி. ஷர்மாவிற்கு தனி பாராட்டுக்கள். மற்றபடி ஒவ்வொரு நடிகர், நடிகைகளும் தங்களுக்கு கொடுத்துள்ள கதாபாத்திரத்தை கச்சிதமாக ஏற்று நடித்துள்ளனர்.

 

முதல் பாதியை போலவே இரண்டாம் பாகத்திலும், மாசான இயக்கத்தை அசால்ட்டாக வெளிப்படுத்தியிருக்கும் இயக்குனர் பிரஷாந்த் நீலுக்கு க்ளாப்ஸ். இயக்கம், திரைக்கதை என இரண்டிலும் மிரட்டுகிறார். அன்பறிவின் ஆக்ஷன் காட்சிகள் ஓகே. ஆனால், லாஜிக் மிஸ்ஸிங். சண்டையில் மட்டுமல்ல படத்தில் இடம்பெற்ற பல காட்சிகளில் லாஜிக்கை எதிர்பார்த்த, ஏமாற்றம் தான் மிஞ்சும்.Bhuvan Gowda-ன் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கிறது. Ujwal Kulkarni-ன் எடிட்டிங் சூப்பர். Ravi Basrur-ன் இசையும், பின்னணி இசையும் பட்டையை கிளப்புகிறது.

 

க்ளாப்ஸ்

யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன் நடிப்பு

இயக்கம், திரைக்கதை

ஒளிப்பதிவு, எடிட்டிங் 

பல்ப்ஸ்

காட்சிகளில் லாஜிக் மிஸ்ஸிங்

மொத்தத்தில், POWERFULL DIRECTORS MAKES POWERFULL MOVIES.. 

3 / 5

கதை இன்னும் முடியல - கே.ஜி.எப் அத்தியாயம் மூன்று 

LATEST News

Trending News

HOT GALLERIES