கவிதையாய் ஒவ்வொரு காட்சியும்: ஐஸ்வர்யா ரஜினியின் 'பயணி' மியூசிக் வீடியோ

கவிதையாய் ஒவ்வொரு காட்சியும்: ஐஸ்வர்யா ரஜினியின் 'பயணி' மியூசிக் வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான ’பயணி’ என்ற மியூசிக் ஆல்பம் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நான்கு நிமிடங்களுக்கு மேல் இருக்கும் இந்த மியூசிக் வீடியோவில் பால் பாக்கெட் போடும் ஹீரோ தனது அம்மாவை அன்பாக கவனித்துக் கொள்வதும், காதலியிடம் தனது அன்பை வெளிப்படுத்தும் காட்சிகளும் உள்ளன.

ஒவ்வொரு காட்சியையும் கவிதை போல் வடிவமைத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி உள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர். அனிருத் குரலில், ஜானி மாஸ்டர், ஸ்ரஷ்டி வர்மாவின் நடிப்பில், அன்கித் திவாரி இசையமைப்பில் விவேகா பாடல் வரிகளில் உருவாகியுள்ள இந்த மியூசிக் வீடியோ இணையதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES