'மாஸ்டர்' படத்தில் விஜய் பேசிய 'தல' வசனம்: வைரலாகும் டெலிட்டட் காட்சி!

'மாஸ்டர்' படத்தில் விஜய் பேசிய 'தல' வசனம்: வைரலாகும் டெலிட்டட் காட்சி!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்’ திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வசூலைக் குவித்தது என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி திரையரங்குகளில் வெளியான 16 நாட்களில் ஓடிடியிலும் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் 'மாஸ்டர்’ திரைப்படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ரன்னிங் டைம் என்பதால் இந்த படத்தின் பல காட்சிகள் நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. இதனை அடுத்து தற்போது ஒரு சில டெலிட்டட் காட்சிகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

அதில் ஒன்று 'மாஸ்டர்’ படத்தில் தல தோனி குறித்து விஜய் பேசிய காட்சிகளின் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ’தோனி பிரஷர் ஆகும் நேரத்தில் கூலாக முடிவு எடுப்பதால் தான் நாம எல்லோருமே அவரை கேப்டன் கூல்ன்னு கூப்பிடுறோம்’ என்று விஜய் வசனம் பேசும் காட்சி உள்ளது.

தல தோனி குறித்து விஜய் பேசிய 'மாஸ்டர்’ படத்தின் இந்த டெலிட்டட் காட்சியின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று தோனியின் மகள் ஷிவாவின் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் தோனியின் மகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

LATEST News

Trending News

HOT GALLERIES