லேட்டான சம்பளம்… வட்டி கேட்கும் நடிகர்!

லேட்டான சம்பளம்… வட்டி கேட்கும் நடிகர்!

நடிகர் அரவிந்த் சுவாமி நடிப்பில் உருவாகியுள்ள சதுரங்க வேட்டை 2 திரைப்படத்தில் அவருக்கான சம்பள பாக்கி 2 வருடங்களுக்கு மேலாக கொடுக்கப்படாமல் இருந்தது.
 

தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி இயக்குனராக இருக்கும் ஹெச் வினோத் முதன் முதலில் இயக்கிய திரைப்படம் சதுரங்க வேட்டை. அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அதன் இரண்டாம் பாகத்துக்காக கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை அவர் எழுதிக் கொடுத்தார். அந்த படத்தில் அரவிந்த் சாமி கதாநாயகனாகவும், ஹீரோயினாக த்ரிஷாவும் நடித்துள்ளார். ‘சலீம்’ படத்தை இயக்கிய நிர்மல் குமார் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். மனோபாலா தயாரித்துள்ள இந்தப் படம் முடிந்து ஒரு வருடத்துக்கு மேலாகிறது.
 

நடிகர் அரவிந்த் சுவாமி மற்ற நடிகர்களைப் போல இல்லாமல் படம் முடிந்த பின்னரே மொத்த சம்பளத்தையும் பெற்றுக்கொள்வார். அட்வான்ஸாக பெரிய தொகை எல்லாம் வாங்குவது இல்லை. ஆனால் டப்பிங்குக்கு முன்னதாக மொத்த சம்பளத்தையும் வாங்கிக் கொண்டுதான் டப்பிங் பேசுவார். ஆனால் சதுரங்க வேட்டை 2 தயாரிப்பாளர் மனோபாலா பொருளாதாரக் காரணங்களால் சம்பள பாக்கி வைத்திருந்ததால் டப்பிங் பேசவில்லை. இதனால் படம் தாமதமாகிக் கொண்டே வந்தது.
 

இந்நிலையில் இப்போது பணத்தை தயார் செய்த மனோபாலா சம்பளத்தைக் கொடுக்க சென்ற போது இத்தனை மாதங்கள் தாமதத்துக்கு வட்டியோடு சேர்த்து சம்பளம் தரவேண்டும் எனக் கேட்டு ஷாக் கொடுத்துள்ளாராம் அரவிந்த்சுவாமி.

LATEST News

Trending News