ஆன்மீகம் பேசினவங்க இப்படியா? சப்ஸ்கிரைபர்களை குஷிப்படுத்தும் அபிராமி.. கசிந்த கவர்ச்சி போட்டோஸ்!

ஆன்மீகம் பேசினவங்க இப்படியா? சப்ஸ்கிரைபர்களை குஷிப்படுத்தும் அபிராமி.. கசிந்த கவர்ச்சி போட்டோஸ்!

சென்னை: இன்ஸ்டாகிராமை திறந்தாலே தற்போது நடிகைகளின் கவர்ச்சி புகைப்படங்களும், விதவிதமான போட்டோசூட்களும் தான் பரவி வருகின்றன. அதிலும் குறிப்பாகச் சினிமா வாய்ப்புகளைப் பெறுவதற்காக நடிகைகள் வெளியிடும் அதிரடியான கவர்ச்சி புகைப்படங்களுக்கு எல்லையே இல்லை என்று சொல்லும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது. அந்த வகையில், பிக் பாஸ் மூலம் பிரபலமான அபிராமி வெங்கடாசலம் தற்போது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள சூடான கவர்ச்சி போட்டோ இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் அபிராமி: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமான அபிராமி, அண்மையில் ஈஷா யோகா மையத்திற்குச் சென்று வெள்ளை நிற உடையில் கண்ணீருடன் இறைவனை மனமுருகி வேண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், அபிராமிக்கு ஆன்மீகத்தின் மீது ஈடுபாடு அதிகமாகிவிட்டது, அவர் துறவியாக மாறிவிட்டாரா? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி வந்தனர்.

Bigg Boss Abhirami Venkatachalam instagram

காதல் கிசுகிசு: ஆனால், அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போலச் சில வாரங்களிலேயே ஆண் நண்பர் ஒருவருடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டார் அபிராமி. அந்த போட்டோவிற்கு கேப்ஷனாக, 'உன் பார்வையிலே கோடிக்கணக்கான காதல் கடிதங்களை எழுதிக் கொண்டு இருக்கும் கண்கள்' என ரோமண்டிக்காகப் பதிவிட்டிருந்தார். இந்த பதிவையும் புகைப்படத்தையும் பார்த்த ரசிகர்கள், அபிராமி காதலிக்கிறார் என்றும், தனது காதலரைத் தான் முறைப்படி அறிமுகம் செய்திருக்கிறார் என்றும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வந்தனர்.

Bigg Boss Abhirami Venkatachalam instagram

காதலும் இல்லை கத்திரிக்காயும் இல்லை: ஆனால், காதலும் இல்லை கத்திரிக்காயும் இல்லை என்று சொல்வது போல, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சப்ஸ்கிரைபர்களை குஷிப்படுத்தும் வகையில் விதவிதமான மாடர்ன் கவர்ச்சி போட்டோக்களைப் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அபிராமியின் இந்த அதிரடி போஸ்களைப் பார்ப்பதற்கு என்றே அவரது சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் இன்ஸ்டாவில் எகிறிக் கொண்டே போகிறது. தற்போது அவரது பிரைவேட் பக்கத்திலிருந்து ஒன்று இரண்டு போட்டோக்கள் கசிந்து தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகின்றன. கறுப்பு நிற டியூப் டாப் போன்ற உடையில் இடை அழகு தெரியும்படி அவ கொடுத்துள்ள இந்த ஹாட் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பலர், எதற்கு இந்த தேவையில்லாத வேலை? சினிமா வாய்ப்பு இல்லை என்பதற்காக இப்படியெல்லாம் கூடவா போட்டோ போடுவீங்க? என கமெண்ட்களில் கேட்டு வருகின்றனர்.

LATEST News

Trending News