முக்கிய நடிகருடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை சமந்தா,ப்ரோமோ வீடியோவுடன் இதோ..

முக்கிய நடிகருடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை சமந்தா,ப்ரோமோ வீடியோவுடன் இதோ..

நான்கு வருட திருமண வாழ்க்கைக்கு பின் நட்சத்திர தம்பதிகளான சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி பிரிவதாக அறிவித்து இருந்தனர்.

இந்நிலையில் சமந்தா மற்றும் நாக சைதன்யா பிரிவுக்கு பிறகு அவர்கள் குறித்து பல்வேறு தகவல் பிரிவின் காரணமாக கூறப்பட்டு வருகிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமந்தா பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் "தன்னை பற்றி பரவிய தவறான செய்திகள் தன்னை எந்தவிதத்திலும் பாதிக்காது" என பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் தெலுங்கு வெர்ஷன் நிகழ்ச்சியை நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கி வருகிறார். அதில் தற்போது நடிகை சமந்தா கலந்துகொண்டுள்ளார், அதன் ப்ரோமோ வெளியாகி இருதரப்பு ரசிகர்களிடையே பரவி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES