'பீஸ்ட்' படத்தின் மூன்று அப்டேட்டுக்கள் அடுத்தடுத்து வருகிறதா?
தளபதி விஜய் நடித்து வரும் ’பீஸ்ட்’ படத்தின் மூன்று அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’பீஸ்ட்’. இந்த படத்தின் 4வது கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது என்பதும் விரைவில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ’பீஸ்ட்’ படத்தின் நாயகி பூஜா ஹெக்டேவுக்கு வரும் 13ஆம் தேதி பிறந்த நாளை எடுத்து ’பீஸ்ட்’ படத்தில் அவருடைய சிறப்பு போஸ்டர் ஒன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. அக்டோபர் 14, 15 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை, விஜயதசமி தினங்களில் ’பீஸ்ட்’ படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.
எனவே அடுத்தடுத்து மூன்று ’பீஸ்ட்’ படத்தின் அப்டேட்கள் வெளிவர வாய்ப்பு இருப்பதால் விஜய் ரசிகர்கள் பரபரப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.