மகள்கள் தினத்தில் மகளுக்கு பெயர் வைத்த ஆர்யா!

மகள்கள் தினத்தில் மகளுக்கு பெயர் வைத்த ஆர்யா!

பிரபல தமிழ் நடிகர் ஆர்யாவுக்கு கடந்த ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தைக்கு நேற்று மகள்கள் தினத்தில் பெயர் வைத்துள்ளார்.

பிரபல தமிழ் நடிகர் ஆர்யா கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி நடிகை சாயிஷாவை காதல் திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று உலகம் முழுவதும் மகள்கள் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் பல பிரபலங்கள் தங்களது மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்தனர். இந்த நிலையில் நடிகர் ஆர்யா தனது மகளுக்கு 'அரியானா’ என்ற பெயரை மகள்கள் தினத்தில் வைத்துள்ளார். மகள்கள் தினத்தில் மகளுக்கு பெயர் வைத்த ஆர்யாவுக்கும் அவருடைய மகளுக்கும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ’சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து அவர் நடித்துள்ள ’அரண்மனை 3’ மற்றும் ’எனிமி’ ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News