சுற்றுலா தினத்தில் உலக அதிசயத்துடன், உலக அழகி வெளியிட்ட புகைப்படம்!

சுற்றுலா தினத்தில் உலக அதிசயத்துடன், உலக அழகி வெளியிட்ட புகைப்படம்!

கடந்த 2012 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான “தமிழன்” திரைப்படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. தற்போது பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம்வருவதுடன் உலகின் முக்கியப் பிரபலங்களில் ஒருவர் என்ற அந்தஸையும் பெற்றுள்ளார்.

நடிகை பிரியங்கா சோப்ரா தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே கடந்த 2000 ஆவது ஆண்டில் உலக அழகி பட்டம் வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் முன்னாள் உலக அழகியான இவர் உலக அதிசயங்களுள் ஒன்றான ஈபிள் டவர் முன்பு நின்று கொண்டிருப்பதைப் போன்ற புகைப்படம் ஒன்றைத் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அடர் நீலம் மற்றும் வெளிர் நீலநிறத்திலான கவுனை அணிந்திருக்கும் இந்தப் புகைப்படம் தற்போது நெட்டிசன்களிடையே பாராட்டைப் பெற்றுவருகிறது.

இந்திய நடிகையான நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான “குவாண்டிகோ” வெப் தொடரின் மூலம் ஹாலிவுட் சினிமா ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார். அதையடுத்து “BayWatch“ போன்ற ஒருசில திரைப்படங்களில் நடித்த அவர் தற்போது பிரம்மாண்ட திரைப்படமான “Matrix 4“ திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் “சிட்டாடல்” எனும் வெப்தொடரில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஹாலிவுட் சினிமாக்களில் தொடர்ந்து கவனம் செலுத்திவரும் அவர் பாலிவுட்டில் கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்திலும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் “ஷுலா” எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதைத்தவிர பாலிவுட் முன்னணி நடிகைகளான ஆலியாபட், கேத்ரினா கைஃப் ஆகியோருடன் இணைந்து நடிக்கும் “Jee Le Zarra” எனும் திரைப்படத்தில் இணைந்து நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி பாலிவுட், ஹாலிவுட் சினிமாக்களிலும் வெப் தொடர்களிலும் பிசியாக நடித்துவரும் நடிகை பிரியங்கா சோப்ரா ஈபிள் டவரிடம் நின்றுகொண்டு போஸ் கொடுக்கும் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News