யார் இந்த சாத்தான் ரைடர்ஸ்: 'வலிமை' வினோத் எடுத்த வித்தியாசமான கதை!
இயக்குனர் எச் வினோத் படம் என்றாலே வித்தியாசமாக இருக்கும் என்றும் ’சதுரங்க வேட்டை’ மற்றும் ’தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய இரண்டு படங்களே இதற்கான சாட்சி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எச் வினோத்தின் அடுத்த படமான ‘வலிமை’ படத்தின் கதையும் இதுவரை இந்திய திரையுலகில் யாரும் எடுக்காத கதை என்று தெரியவருகிறது.
நேற்றைய ‘வலிமை’ படத்தையும் கிளிம்ப்ஸ் வீடியோவில் சாத்தான் ரைடர்ஸ் என்று வில்லன் குரலில் வசனங்கள் வரும். இந்த சாத்தான் ரைடர்ஸ் என்று கூறப்படுபவர்கள் அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள ஹிட்லரின் அடிமைகள் என்றும் பைக் ரைடர்களான இவர்கள் பல குற்றங்களை செய்து பல்வேறு நாடுகளில் கைதாகி உள்ளார்கள் என்றும் தெரியவருகிறது.
இப்படிப்பட்ட சாத்தான் ரைடர்ஸ்களை ஒழிப்பதற்காக உலகின் பல நாடுகள் தனிப்படை போலீசார்களை அமைத்து ஓரளவு கட்டுப்படுத்தினாலும் இன்னும் ஒருசில குழுக்கள் செயல்பட்டு வருவதாகவும் அவ்வாறு செயல்படும் குழுக்களின் ஒன்றின் கதை தான் ‘வலிமை’ படத்தின் கதை என்றும் தெரிய வருகிறது.
இந்த சாத்தான் ரைடர்ஸ் நீண்ட பைக்குகளின் மூலம் ரைட் செய்து கொலை கொள்ளை மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவார்கள் என்றும் அவர்களை பிடிக்கும் சர்வதேச போலீஸ் கேரக்டரில் தான் அஜீத் நடித்து உள்ளார் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த சாத்தான் ரைடர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் என்றும், உலகின் பல நாடுகளில் இவர்கள் தேடப்படும் தேடப்படும் குற்றவாளிகளாக இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
எனவே தமிழ் திரையுலக இயக்குனர்கள் மட்டுமின்றி இந்திய திரை உலக இயக்குனர்கள் யாரும் தொடாத வித்தியாசமான கதையை எச் வினோத் எடுத்துள்ளதால், இந்த படம் இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.