சந்திரமுகி 2ம் பாகத்தில் ஜோதிகா வேடத்தில் நடிக்க இருப்பது இந்த நடிகையா?

சந்திரமுகி 2ம் பாகத்தில் ஜோதிகா வேடத்தில் நடிக்க இருப்பது இந்த நடிகையா?

தமிழ் சினிமாவில் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட படங்களில் ஒன்று சந்திரமுகி. வாசு இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, பிரபு, ஜோதிகா, நாசர், வடிவேலு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடிக்க வெளியாகிய இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்.

இப்படத்தின் 2ம் பாகம் தயாராக இருப்பதாக ராகவா லாரன்ஸ் கடந்த வருடம் அறிவித்தார். வாசு இயக்கப்போகும் இந்த புதிய படத்தில் நாயகனாக ராகவா லாரன்ஸ் தான் நடிக்கிறார்.

செய்தி வந்ததில் இருந்தே ஜோதிகா வேடத்தில் நடிக்கப்போவது யார் என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்தது. இப்போது வந்த தகவல் என்னவென்றால் ஜோதிகா வேடத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டியை நடிகக வைக்க பேசப்பட்டு வருகிறதாம்.

அவர் தரப்பில் விரைவில் முடிவாகிவிடும் என சில செய்திகள் தெரிவிக்கின்றன.

LATEST News

Trending News

HOT GALLERIES