மாமனாரின் பதிவை ஷேர் செய்து, பின் அதனை நீக்கிய சமந்தா! என்ன காரணம் தெரியுமா?

மாமனாரின் பதிவை ஷேர் செய்து, பின் அதனை நீக்கிய சமந்தா! என்ன காரணம் தெரியுமா?

தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வரும் சமந்தா, தற்போது விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் சமூக வலைத்தளத்தில் தனது பெயருடன் சேர்த்து வைத்திருந்த நாக சைதன்யாவின் குடும்ப பெயரான அக்கினேனியை சமந்தா நீக்கியிருந்தார்.

இதனால் சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாகவும், அவர்கள் விரைவில் விவாகரத்து செய்துகொள்ள போவதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் தனது தந்தையின் நினைவு நாளையொட்டி நாகார்ஜூனா வெளியிட்டிருந்த வீடியோவை சமந்தா ட்விட்டர் பக்கத்தில் மிகவும் அழகாக இருப்பதாக பதிவிட்டு இருந்தார்.

திடீரென அந்த பதிவை நீக்கிய சமந்தா, மிகவும் அழகாக இருக்கிறது மாமா என குறிப்பிட்டு சமந்தா மீண்டும் அந்த வீடியோவை ஷேர் செய்திருந்தார். 

LATEST News

Trending News