இப்படி மட்டும் நடிக்கவே மாட்டேன்.. நடிகை லாஸ்லியா பேட்டி

இப்படி மட்டும் நடிக்கவே மாட்டேன்.. நடிகை லாஸ்லியா பேட்டி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லாஸ்லியா தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நாயகி ஆகியுள்ளார்.

இவர் நடிப்பில் உருவான முதல் திரைப்படம், Friendship சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும், தற்போது கே.எஸ். ரவிக்குமார் தயாரித்து, நடித்து வரும் கூகுள் குட்டப்பா படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் லாஸ்லியாவிடம், ‘ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து படமாக்கப்படும் ஃபேமிலி மேன் போன்ற திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அதற்கு பதிலளித்த லாஸ்லியா " இலங்கையில் என்ன நடந்தது என்பது எனக்கும், அங்கு வாழும் மக்களுக்கும் நன்றாகவே தெரியும். ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து எடுக்கப்படும் எந்த ஒரு திரைப்படத்திலும் நான் நடிக்க மாட்டேன் " என்று கூறியுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES