நயன்தாரா வீட்டில் நடந்த விசேஷ நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன்: வைரல் புகைப்படங்கள்

நயன்தாரா வீட்டில் நடந்த விசேஷ நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன்: வைரல் புகைப்படங்கள்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வீட்டில் நடந்த விஷயம் ஒன்றில் இயக்குனர் விக்னேஷ் சிவன் கலந்துகொண்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்களின் தாயார் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் விசேஷத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் கலந்து கொண்டு அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நயன்தாரா தாயாரின் பிறந்த நாள் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படங்களுக்கு இரண்டு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்னேஷ் சிவன் தற்போது விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடித்துவரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு கட்டத்தில் உள்ளது என்பதும், விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES