பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை திடீரென நிறுத்திய மணிரத்னம்: காரணம் என்ன?

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை திடீரென நிறுத்திய மணிரத்னம்: காரணம் என்ன?

பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் அவர்கள் கடந்த சில மாதங்களாக ’பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு மத்தியபிரதேச மாநிலம் மற்றும் ஊட்டியில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். இதனையடுத்து படக்குழுவினர் பொள்ளாச்சிக்கு சென்று படப்பிடிப்புக்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில் பொள்ளாச்சிக்கு படப்பிடிப்புக்கு கிளம்பிய மணிரத்னம் திடீரென தனது பயணத்தை ரத்து செய்துள்ளதாகவும் ஏற்கனவே பொள்ளாச்சி சென்ற தனது படப்பிடிப்புக் குழுவினரை திரும்பிவர அவர் கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. படப்பிடிப்பு ரத்தானதற்கு சரியான காரணம் என்ன என்று தெரியவில்லை.

தற்போது ’சர்தார்’ படப்பிடிப்பில் இருக்கும் கார்த்தியும் பொள்ளாச்சியில் நடைபெற இருந்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருந்ததாகவும், ஆனால் மணிரத்னம், படப்பிடிப்பை ரத்து செய்துள்ளதால் அவரும் பொள்ளாச்சி செல்லவில்லை என்றும் கூறப்பட்டது.

பொள்ளாச்சியில் ஒரு பாடல் காட்சியை படமாக்க மணிரத்னம் திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் அந்த பாடல் காட்சி இல்லாமலேயே படத்தை வெளியிட தீர்மானித்து இந்த படப்பிடிப்பை ரத்து செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES