லேட்டஸ்ட்டாக மாலத்தீவு சென்ற ரஜினி, தனுஷ், சிம்பு பட நடிகை!

லேட்டஸ்ட்டாக மாலத்தீவு சென்ற ரஜினி, தனுஷ், சிம்பு பட நடிகை!

பிரபல நடிகைகள் பலரும் கடந்த சில மாதங்களாக மாலத்தீவு சுற்றுலா சென்று வருகின்றனர் என்பதும் குறிப்பாக அவர்கள் மாலத்தீவில் பதிவு செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதும் தெரிந்ததே.

மாலத்தீவு அரசு சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக மில்லியன் கணக்கில் இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்கள் உள்ள நடிகைகளுக்கு இலவசமாக விமான பயணம், உணவு, தங்குமிடம் ஆகிய அனைத்து வசதிகளும் செய்து தருகிறது என்பதும், அதனால் தமிழ் நடிகைகள் உட்பட பல நடிகைகள் அவ்வப்போது மாலத்தீவு சென்று வருகிறார்கள் என்பதை பார்த்தோம். சமீபத்தில்கூட நடிகை ஆண்ட்ரியா, சன்னிலியோன் உள்பட ஒரு சிலர் மாலத்தீவு சென்று வந்தனர்.

அந்த வகையில் தற்போது மாலத்தீவு செல்லும் நடிகைகளின் லிஸ்டில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் நடிகை மேகா ஆகாஷ். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மேகா ஆகாஷ், சிம்பு நடித்த ’வந்தா ராஜாவா தான் வருவேன்’ தனுஷ் நடித்த ’எனை நோக்கி பாயும் தோட்டா’ உட்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

இவர் தற்போது மாலத்தீவு சுற்றுலா சென்றுள்ளார் என்பதும் மாலத்தீவில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

LATEST News

Trending News

HOT GALLERIES