'காத்துவாக்குல ரெண்டு காதல்: கலக்கல் அப்டேட் கொடுத்த படக்குழுவினர்!

'காத்துவாக்குல ரெண்டு காதல்: கலக்கல் அப்டேட் கொடுத்த படக்குழுவினர்!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது

இந்த நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் அனிருத் கம்போஸ் செய்த அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலானது என்பதும் தெரிந்ததேஇந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் ’Two Two Two’ என்று ஆரம்பமாகும் என்றும் இந்த பாடல் வரும் 18ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் சிங்கிள் பாடலை போடவே இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலும் ரசிகர்கள் மனதை கவரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

LATEST News

Trending News

HOT GALLERIES