மஹத் படத்தில் வில்லனாக அறிமுகமாகும் ஆதவ்
ஜில்லா, மங்காத்தா படங்களில் நடித்த மஹத், தற்போது கதாநாயகனாக ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
பிக் பாஸ் புகழ் மஹத், ஐஸ்வர்யா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் "கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா". இப்படத்தில் யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி கலைஞர்கள் நடிக்கின்றனர். ரொமான்ஸ் காமெடி வகையில் உருவாகும் இத்திரைப்படத்தில் அறிமுக நடிகர் ஆதவ் எதிர்மறை நாயகனாக நடிக்கிறார்.

இவர் ஏற்கனவே மாடலிங், மேடை நாடக நடிப்பு, கால்பந்து, குத்துச்சண்டை, ஸ்டண்ட் என்று பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். இப்படம் தனக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஆதவ். பல முன்னணி கலைஞர்கள் பங்களிப்பில் காதல் காமெடி கலந்த அட்டகாசமான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகி வருகிறது.