நடிகை திரிஷாவிற்கு விரைவில் திருமணம்..? சந்தோஷத்தில் குடும்பம்

நடிகை திரிஷாவிற்கு விரைவில் திருமணம்..? சந்தோஷத்தில் குடும்பம்

ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, சூர்யாவின் மவுனம் பேசியதே படத்தின் மூலம், தமிழ் திரையுலகில் கதாநாயகியாக ஆனவர், நடிகை திரிஷா.

அதைத்தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழி படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

தற்போது இவர் கைவசம், பொன்னியின் செல்வன், சதுரங்க வேட்டை 2,ராங்கி, கர்ஜனை ஆகிய படங்கள் உள்ளன.

இதில் பொன்னியின் செல்வன் படத்தை தவிர மற்ற இரண்டு படங்களும் படப்பிடிப்பு முடிந்து வெளியாக தயாராகியுள்ளது.

இதன்பின் நடிகை திரிஷா வேறு எந்த புதிய படங்களிலும் கமிட்டாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை திரிஷாவிற்கு விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக தான், நடிகை திரிஷா, புது படங்களில் கமிட்டாகவில்லை என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறியதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES