முதல் ஆளாக தனது திரைப்படத்தை வெளியிடும் விஜய் சேதுபதி, வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

முதல் ஆளாக தனது திரைப்படத்தை வெளியிடும் விஜய் சேதுபதி, வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி மிக சிறந்த நடிகராகவும் விளங்கி வருபவர்.

மேலும் தொடர்ந்து திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வரும் விஜய் சேதுபதி தற்போது கமலுடன் விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி எந்தத்திரைப்படத்தில் நடிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்நிலையில் S.P.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியாகியிருக்க வேண்டியது.

ஆனால் கொரோனா இரண்டாவது அலையால் தள்ளிப்போன இப்படம் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆம் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி லாபம் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் விஜய் சேதுபதியின் திரைப்படம் தான் முதலில் வெளியாகிறது குறிப்பிடத்தக்கது. 

LATEST News

Trending News