விஜய் சேதுபதி, டாப்ஸி கூட்டணியில் அடுத்த படம் குறித்த அப்டேட்....!

விஜய் சேதுபதி, டாப்ஸி கூட்டணியில் அடுத்த படம் குறித்த அப்டேட்....!

நடிகர் விஜய் சேதுபதி அடுத்து நடிக்கவுள்ள ஹாரர் காமெடிப் திரைப்படம் குறித்த செய்திகள் வெளியாகி உள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடித்து வருபவர் தான் விஜய் சேதுபதி. இன்றைய சூழலில் அதிக திரைப்படங்கள் நடித்து வரும் நடிகரும் இவரே. இதேபோல் நடிகை டாப்ஸியும் இந்தி, தெலுங்கு, தமிழ் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் புதிய ஹாரர் காமெடி படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளனர். விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள், இத்திரைப்படத்தில் ஒன்றிணைந்துள்ளனர். அறிமுக இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில், பேஷன் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படம், பீரியட் படமாகும், இதில் நாயகன் மற்றும் நாயகி இருவருக்குமே இரண்டு வேடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஓடிடி தளமான ஹாட் ஸ்டாரில் வெளியாகவிருக்கும் படத்தை, ஜெய்ப்பூர் மற்றும் சென்னையில் படமாக்க திட்டமிட்டுள்ளது படக்குழு. முதல் பாகத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பை வைத்து தான், 2-ஆம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES