விவாகரத்து வதந்திக்கு பண்ணை வீட்டின் மூலம் பதிலடி கொடுத்த சமந்தா!
நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்யப் போகிறார் என சமூகவலைதளங்களில் வதந்திகள் பரவிய நிலையில் அந்த வதந்திக்கு தனது பண்ணை வீடு ஒன்றின் மூலம் சமந்தா பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகை சமந்தா சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து சமந்தா அக்கினெனி என்ற பெயரை நீக்கிவிட்டு சமந்தா எஸ் என்று பதிவு செய்திருந்தார். இதனை அடுத்து சமந்தா மற்றும் நாக சைதன்யா இடையே கருத்து வேறுபாடு என்றும் விரைவில் இருவரும் பிரியப் போகிறார்கள் என்றும் வதந்திகள் பரவியது. இந்த வதந்தி குறித்து எந்த பதிலும் சொல்லாமல் இருந்த சமந்தா, தற்போது பண்ணை வீடு கட்டுவதன் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.
சமந்தா மற்றும் நாகசைதன்யா ஆகிய இருவரும் சேர்ந்து கோவாவில் ஒரு பண்ணை வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். கோடிக்கணக்கில் செலவு செய்து கட்டப்படும் இந்த பண்ணை வீடு உலகத் தரத்தில் இருக்கும் என்றும், இந்த பண்ணை வீட்டிற்கு முக்கியமான சமயங்களில் மற்றும் ஓய்வு நேரங்களில் இருவரும் தாங்குவதற்காக கட்டப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
எதிர்காலத்தை இவ்வளவு திட்டமிட்டு வாழ்க்கை நடத்தும் சமந்தாவா விவாகரத்து செய்வார்? என்று வதந்தி கிளப்பிவிட்டவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் சமந்தா என்று அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
நடிகை சமந்தா தற்போது தமிழில் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.