சமந்தாவுக்கு கிடைத்த சூப்பர் விருது: திரையுலகினர் வாழ்த்து!

சமந்தாவுக்கு கிடைத்த சூப்பர் விருது: திரையுலகினர் வாழ்த்து!

 

ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்னில் நடைபெற்று வரும் இந்திய திரைப்பட விழாவில் பல தமிழ் திரைப்படங்கள் கலந்து கொண்டன என்பது தெரிந்ததே. குறிப்பாக சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்த சூர்யா சிறந்த நடிகருக்கான பட்டியலிலும், இந்த படத்தை இயக்கிய சுதா கொங்கரா சிறந்த இயக்குனருக்கான பட்டியலிலும் இடம்பெற்றிருந்தனர்.

அதேபோல் அமேசானில் வெளியான ’தி ஃபேமிலிமேன் 2’ என்ற தொடரில் நடித்த சமந்தாவின் பெயர் சிறந்த நடிகைக்கான பட்டியலில் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி சூரரைப்போற்று படத்தில் நடித்த சூர்யாவுக்கு சிறந்த நடிகர் விருதும், ‘தி ஃபேமிலிமேன் 2’ படத்தில் நடித்த சமந்தாவுக்கு சிறந்த நடிகை விருதும் கிடைத்துள்ளது. சிறந்த நடிகர், நடிகை விருதுகளை பெற்ற சூர்யா, சமந்தாவுக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் மனோஜ் பாஜ்பாய், வித்யா பாலன், அனுராக் பாசு உள்பட பலருக்கும் விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மலையாள திரைப்படமான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்திற்கும் விருது கிடைத்துள்ளது.

இதையும் படியுங்கள் : இது ஆந்தாலஜி படம் இல்லை....! படக்குழு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு....!

LATEST News

Trending News

HOT GALLERIES