நடிகை மாளவிகாவுக்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா? வைரல் புகைப்படங்கள்!

நடிகை மாளவிகாவுக்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா? வைரல் புகைப்படங்கள்!

கடந்த 1999ஆம் ஆண்டு அஜித் நடித்த ’உன்னை தேடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா. அதன் பிறகு அஜித்துடன் ’ஆனந்த பூங்காற்றே’ என்ற திரைப்படத்திலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ’ரோஜாவனம்’ ’வெற்றிகொடிகட்டு’ ’பேரழகன்’ ’அய்யா’ ‘சந்திரமுகி’ உள்பட பல திரைப்படங்களில் மாளவிகா நடித்தார்.

இந்த நிலையில் நடிகை மாளவிகா கடந்த 2007ஆம் ஆண்டு சுரேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் திருமணத்துக்கு பிறகும் அவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை மாளவிகாவுக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளார்கள் என்பதும் அவர் அவ்வப்போது பதிவு செய்யும் புகைப்படங்கள் வைரலாகி வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் மாளவிகா சமீபத்தில் மாலத்தீவுக்கு தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சென்ற நிலையில் இதுகுறித்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அஜித் படத்தில் அறிமுகமான மாளவிகாவுக்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா? என ஆச்சரியம் அடைந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES