கீர்த்தி சுரேஷிற்காக அஜித் பட கதையில் மாற்றம்

கீர்த்தி சுரேஷிற்காக அஜித் பட கதையில் மாற்றம்

கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் கலக்கி வருகின்றார்.

தற்போது மலையாளத்திலும் இவர் ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் அஜித் படமான வேதாளம் ரீமேக்கில் தெலுங்கில் நடிக்கின்றார்.

இப்படத்தில் ஹீரோவாக சிரஞ்சீவி நடிக்க, அவருக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார்.

கீர்த்தி தெலுங்கில் நடித்த மகாநடி படம் அவருக்கு தேசிய விருதெல்லாம் வாங்கிக்கொடுத்து, அவருக்கென பெரிய மார்க்கெட் அங்கு உருவாக்கிவிட்டது.

அதன் காரணமாகவே கீர்த்தி சுரேஷிக்கு என்று தமிழில் இல்லாத காட்சிகளை கூட, இதில் அதிகம் சேர்க்க கூறியிருக்கிறார்களாம்.

கண்டிப்பாக இந்த படம் சிரஞ்சீவி படம் என்றில்லாமல், கீர்த்திக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

LATEST News

Trending News