ஒரே தெலுங்குப் படத்தில் ராதிகா, ஊர்வசி, குஷ்பு

ஒரே தெலுங்குப் படத்தில் ராதிகா, ஊர்வசி, குஷ்பு

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி கதாநாயகிகளாக இருந்து இப்போதும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருப்பவர்கள் ராதிகா, ஊர்வசி, குஷ்பு. இவர்களில் ராதிகா, ஊர்வசி தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். குஷ்பு மட்டும் ஒரு இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் 'அண்ணாத்த' படத்தில் ரீ-என்ட்ரி ஆகிறார்.

இவர்கள் மூவரும் இணைந்து அடுத்து சர்வானந்த், ராஷ்மிகா நடிக்கும் தெலுங்குப் படமான 'ஆடவால்லு மீக்கு ஜோஹார்லு' என்ற படத்தில் நடிக்க உள்ளார்கள். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத் தயாரிப்பு நிறுவனமான எஸ்எல்வி சினிமாஸ் வெளியிட்டுள்ளது.

தமிழில் இவர்கள் மூவரும் இதற்கு முன்பு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் 'ஓ அந்த நாட்கள்' படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். அப்படத்தில் சுஹாசினி, சுலக்ஷனா ஆகியோரும் நடித்துள்ளார்கள். ஆனால், அப்படம் இன்னும் வெளியாகவில்லை.

'ஆடவால்லு மீக்கு ஜோஹார்லு' படத்தை கிஷோர் திருமலா இயக்க தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான போஸ்டருக்கே ரசிகர்கள் மயங்கிப் போய் உள்ளார்கள். கொரானோவால் தாமதமான படப்பிடிப்பு மீண்டும் விறுவிறுப்பாக நடைபெற உள்ளதாம்.

LATEST News

Trending News