பவர்ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கும் நித்யா மேனன்

பவர்ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கும் நித்யா மேனன்

ரீமேக் படம் ஒன்றில் நடிகை நித்யா மேனன் பவர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மலையாளத்தில் கடந்தாண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. சாஷி இயக்கிய இந்தப் படத்தில் அய்யப்பனாக பிஜூமேனனும், கோஷியாக பிருத்விராஜும் நடித்திருந்தனர். இரண்டு அதிகாரிகளின் இடையில் ஏற்படும் ஈகோ மோதலை யதார்த்தமாக எடுத்துக் காட்டியது இந்தத் திரைப்படம். இதனால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. 

இந்தப் படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர். இதில் பிஜூமேனன் நடித்த அய்யப்பன் கதாபாத்திரத்தில் பவர்ஸ்டார் பவன் கல்யாணும், பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் ராணாவும் நடிக்கின்றனர். 

பவன் கல்யாண், நித்யா மேனன்

இந்த படத்தில் மற்றுமொரு முக்கிய கதாபாத்திரம் என்றால் அது அய்யப்பன் மனைவி கண்ணம்மா கதாபாத்திரம் தான், அதன்படி தெலுங்கு ரீமேக்கில் பவர்ஸ்டார் பவன் கல்யாண் மனைவியாக நித்யா மேனன் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவர் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES