தமிழ், தெலுங்கில் தீபிகா படுகோனே படம்: பூஜையுடன் இன்று ஆரம்பம்!
தமிழ், தெலுங்கு உள்பட பான் - இந்தியா படமாக உருவாகவிருக்கும் திரைப்படத்தில் தீபிகா படுகோனே நடிக்கவுள்ளார் என்றும், இந்த படத்தின் பூஜை இன்று நடைபெறவிருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் உடன் தீபிகா படுகோனே நடிக்கும் சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படம் ஒன்றை இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் நடித்த சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘நடிகையர் திலகம்’ என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் பிரபாஸ், தீபிகா படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்குவதாகவும் ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த பூஜையில் அமிதாப்பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோனே உள்பட படக்குழுவினர் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்பட பல மொழிகளில் தயாராக உள்ளது. முதல்முறையாக பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோனே நடிப்பதால் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும், இந்த படம் அடுத்தாண்டு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.