இயக்குனராக மாறிய பிரபல நடிகரை புகழ்ந்து தள்ளிய பிரபல பிக் பாஸ் நடிகை - என்ன சொன்னார் தெரியுமா

இயக்குனராக மாறிய பிரபல நடிகரை புகழ்ந்து தள்ளிய பிரபல பிக் பாஸ் நடிகை - என்ன சொன்னார் தெரியுமா

மணிரத்னம் தயாரிப்பில் 9 இயக்குனர்களின் இயக்கத்தில் நவரசா என்னும் ஆந்தாலஜி திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த ஆந்தாலஜி திரைப்படம், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று 190 நாடுகளில் வெளியாகிறது.

இதில், மனித உணர்வுளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை இந்த ஆந்தாலஜி படம் உள்ளடக்கியுள்ளது.

இதில் ஒரு பகுதியாக, நடிகர் அரவிந்த் சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள "ரௌத்திரம்" கதையில் ‘அன்புக்கரசி’ வேடத்தில் நடிகை ரித்விகா நடித்துள்ளார்.

இப்படம் பற்றி ரித்விகா கூறுகையில், " அரவிந்த் சாமி போன்ற புகழ்பெற்ற நடிகருடன் பணிபுரிவது, என் வாழ்வில் மிகப்பெருமையான தருணம். ஒரு நடிகராக இல்லாமல் இயக்குனராக அவரை அருகில் இருந்து பார்த்தது, மிக மகிழ்ச்சியாக இருந்தது. சினிமா குறித்த அவரது நுணுக்கமான அறிவும் அதை உருவாக்கத்தில் அவர் பயன்படுத்திய முறையும் அபாரமானது " என்று கூறியுள்ளார். 

LATEST News

Trending News