நான் 4 அல்ல, 40 திருமணம் கூட செய்து கொள்வேன்: பவர்ஸ்டார் முன்னிலையில் வனிதா பேச்சு!

நான் 4 அல்ல, 40 திருமணம் கூட செய்து கொள்வேன்: பவர்ஸ்டார் முன்னிலையில் வனிதா பேச்சு!

நான் நான்கு அல்ல 40 திருமணம் கூட செய்து கொள்வேன் என்று பவர் ஸ்டார் சீனிவாசன் முன்னிலையில் நடிகை வனிதா விஜயகுமார் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் வனிதா ஆகிய இருவரும் திருமணம் செய்து கொள்வது போன்றும், மாலை மாற்றிக் கொள்வது போன்றும், தாலி கட்டுவது போன்றுமான புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. இந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வனிதாவே பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வனிதா மற்றும் பவர்ஸ்டார் சீனிவாசன் ஆகிய இருவரும் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள் என்றும் அந்த புகைப்படங்கள் தான் இவை என்றும் கூறப்பட்டு வந்தன. இந்த தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் வனிதா விஜயகுமார் ஆகிய இருவரும் ’பிக்கப் டிராப்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தை பவர் ஸ்டார் சீனிவாசன் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் பேசிய வனிதா விஜயகுமார் ’தான் அரசியலுக்கு வரவிருப்பதாக தன்னுடைய ஜோதிடர் கூறினார் என்றும் ஆனால் தனக்கு அரசியலில் விருப்பமில்லை என்று தெரிவித்தார். மேலும் திருமணம் செய்துகொள்வது தன்னுடைய தனிப்பட்ட உரிமை என்றும் நான்கு அல்ல 40 திருமணம் கூட செய்து கொண்டாலும் அதை சமாளிக்கும் திறனும் அதில் பிரச்சினை ஏற்பட்டால் அச்சப்படாமல் சந்திக்கவும் தனக்கு தெரியும் என்றும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய பவர் ஸ்டார் சீனிவாசன் அவர்கள் ’வனிதா விஜயகுமார் ஒரு இரும்பு பெண்மணி என்றும் அவர் பல கஷ்டங்களையும் துன்பங்களையும் கடந்து வந்துள்ளார் என்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் தெரிவித்தார்.

LATEST News

Trending News

HOT GALLERIES