சார்பட்டா பரம்பரை திரை விமர்சனம்

சார்பட்டா பரம்பரை திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் புதிய புதிய முயற்சிகள் நடக்கும். அப்படி தன் முதல் படம் முதலே பல புதிய விஷயங்களையும், புரட்சி கருத்துக்களையும் மக்கள் மனதில் பதிய வைத்தவர் தான் பா.ரஞ்சித்.

அவர் இயக்கத்தில் 5வது படமாக சார்பட்டா பரம்பரை இன்று திரைக்கு வந்துள்ளது. ரஞ்சித் இந்த படத்தில் தொட்ட களமும் வெற்றியை கொடுத்ததா? பார்ப்போம்

  கதைக்களம்

படத்தின் ட்ரைலரிலேயே கதை முழுவதையும் ரஞ்சித் சொல்லி விட்டார். சார்பட்டா பரம்பரை, இடியாப்ப பரம்பரை இந்த இரண்டு பரம்பரையும் கால காலமாக மோதி வருகிறது.

ஆரம்பத்தில் கை ஓங்கி நின்று சார்பட்டா பரம்பரை காலப்போக்கில் இடியாப்ப பரம்பரையிடம் தோற்றுக்கொண்டே வருகிறது. ஒருநாள் பசுபதி கடைசியாக ஒரு சண்டை இதில் நான் தோற்றால், சார்பட்டா பரம்பரை இனி பாக்ஸிங்கே போடாது என சவால் விடுகிறார்.

அவர் சவாலுக்குள் ஆர்யா எப்படி வந்தார், வந்து சார்பட்டா பரம்பரைக்காக வெற்றியை தேடி தந்தாரா என்பது மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

ஆர்யா ஒரு கதைக்காக எவ்வளவு தன்னை அர்பணிக்கின்றார் என்பதை படத்திற்கு படம் நிரூபித்து வருகிறார், உடம்பை இரும்பாக்கி அவர் சண்டையிடும் போது அத்தனை யதார்த்தம், இன்னும் 10 பேரை அவர் அடித்தால் கூட நம்பலாம் என்பது போல் உள்ளது. இரண்டாம் பாதியில் ரவுடிசம் செய்து குடித்து தன் உடல், மனம் என அனைத்தும் வலுவிழந்து அவர் இருக்கும் காட்சிககும் அசால்ட்டாக ஸ்கோர் செய்கிறார்.

படத்தில் இவர் நடித்தார் அவர் நடித்தார் என்பதை விட, கபிலன், ரங்கன் வாத்தியார், வேம்புலி, ராமன், வெற்றி என கதாபாத்திரங்களாகவே வாழ்ந்துள்ளனர்.

அதிலும் டான்ஸிங் ரோஸ் என்று ஒரு குத்துச்சண்டை வீரர் வருகிறார். அட யப்பா, எங்கையா இவர புடிச்சீங்க, இப்படியெல்லாம் கூடவா சண்டை செய்வார்கள் என்பது போல் மிரட்டியுள்ளார், நீங்களே பாருங்கள்.

பாக்ஸிங் என்பதை ஒருவரை நல்வழிப்படுத்தும், ஆனால், அதே பாக்ஸிங் வெளியில் பகையை உண்டாக்கி, அந்த கலையை ரவுடிசத்திற்கு பயன்படுத்தி எப்படி வாழ்க்கை சீரழிகிறது என்பதை ரஞ்சித் நம்மை அருகில் அழைத்து உட்கார்ந்து பாடமெடுத்துள்ளார்.

குறிப்பாக குடித்து விட்டி மனைவியை அடிக்கும் ஆர்யா, அடுத்த நாள் மனைவி காலில் விழுந்து கெஞ்சி மன்னிப்பு கேட்க, அதற்கு மனைவியும், உன்ன விட்டு எங்கப்ப போறது, இந்த புடிச்சா டீய குடி, இல்லாட்டி இந்த சாரயம் அத குடி என்று சொல்லுமிடம் ரசிக்க வைக்கிறது.

படம் பல வருடங்களுக்கு முன்பு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் நடக்க, அப்போது இருந்த கட்சி தலைவர்களை அப்படியே அவர்கள் பெயர் சொல்லி காட்டியது மற்றும் எமர்ஜன்ஸி உத்தரவு என பல கால நிகழ்வுகளை தன் கதைக்கு சாதகமாக அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்.

   படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு, அத்தனை கூட்ட நெரிசலையும் அவ்வளவு அழகாக படம்பிடித்துள்ளனர், ஆனால், என்னமோ எப்போதும் பட்டையை கிளப்பும் சந்தோஷ் நாராயணன் இதில் அடக்கி வாசித்தது போல் தெரிகிறது, கொஞ்சம் ஏமாற்றம்.

க்ளாப்ஸ்

படத்தின் கதைக்களம், அதற்கு ஏற்ற திரைக்கதை பாக்ஸிங் சண்டைக்காட்சிகளை அத்தனை தத்ரூபமாக எடுத்தது.

செட் பற்றி சொல்லியே ஆகவேண்டும், பழைய மெட்ராஸை அப்படியே செட் அமைத்து செட்டே தெரியாதது போல் அமைத்துள்ளனர்.

நடிகர், நடிகைகள் யதார்த்த நடிப்பு.

பல்ப்ஸ்

  படத்தில் பல வசனங்கள் எல்லோருக்கும் புரியுமா என்றால் சந்தேகம் தான், சென்னை தமிழ் பல வசனங்கள் புரியவில்லை.

இரண்டாம் பாதி கொஞ்சம் நீளம்

மொத்தத்தில் 80களின் ரோசமான இந்த பாக்ஸிங்கை ரஞ்சித் நம் கைப்பிடித்து அழைத்து சென்று அத்தனை சுவாரஸ்யமாக காட்டியுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES