பின்னணி பாடகியின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை

பின்னணி பாடகியின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை

பிரபல பின்னணி பாடகி ஒருவரின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 5 பேர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தெலுங்கு திரையுலகின் பிரபல பின்னணி பாடகி ஒருவர் தனது கணவரை பிரிந்து வாழும் நிலையில் தனது 15 வயது மகளை சாலிகிராமத்தில் உள்ள தனது தங்கையின் வீட்டில் தங்க வைத்திருந்தார். கடந்த சில ஆண்டுகளாக சித்தியின் வீட்டில் வளர்ந்து வந்த 15 வயது சிறுமியை சமீபத்தில் பின்னணி பாடகி ஐதராபாத்துக்கு அழைத்து சென்றுள்ளார்

இந்த நிலையில் சிறுமியின் உடல் நலம் திடீரென சரியில்லாமல் போனதால் தாய் சிறுமியிடம் விசாரித்தபோது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சித்தியின் வீட்டில் சிறுமி இருந்த போது சித்தியின் கணவர் உள்பட உறவினர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதுமட்டுமின்றி மதபோதகர் ஒருவரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிய வந்தது.

இதனை அடுத்து பின்னணி பாடகி சென்னை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிறுமியிடம் ரகசியமாக வாக்கு மூலம் நடத்தப்பட்ட நிலையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுமியின் சித்தி, சித்தப்பா, உறவினர் மகன், மாமா மற்றும் கிறிஸ்துவ பாதிரியார் ஆகிய ஐவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

இந்த நிலையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் தலைமறைவான நிலையில் அவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் பாதிரியார், சிறுமியின் சித்தி, சித்தப்பா உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES