ஷங்கர்-ராம்சரண் தேஜா படத்தின் வில்லன் இவரா?
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில், பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் படப்பிடிப்பு தொடங்கி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதி இருப்பதாகவும் திரைக்கதை வசனம் எழுதி ஷங்கர் இயக்க இருப்பதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்தில் ராம்சரண் தேஜா இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது புதிய தகவலாக உள்ளது.
அதுமட்டுமின்றி இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஜெகபதி பாபு உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. பிரமாண்டமாக தயாராகும் இந்த திரைப்படம் தெலுங்கு ரசிகர்களை மட்டுமின்றி தமிழ் ரசிகர்களையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.