பெண் ரசிகைகளிடம் அஜித் விரும்பும் ஒரே விஷயம் என்ன தெரியுமா?- அவரே சொன்னது தான்
அஜித் தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் ஒரு நடிகர். இவரது நடிப்பில் அடுத்து வலிமை என்ற படம் வெளியாகவுள்ளது.
ஆனால் எப்போது ரிலீஸ் என்று ஒன்றும் இதுவரை தெரியவில்லை. அஜித் பேட்டிகள் கொடுப்பதை எப்போதோ நிறுத்திவிட்டார், ஆரம்ப கட்டத்தில் சில பேட்டிகள் கொடுத்துள்ளார்.
அதில் ஒன்றில் பெண் ரசிகைகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், ரசிகைகளுக்கு என் லுக்கை தாண்டி என் நடிப்பு பிடித்தால் சந்தோஷம்.
ரசிகைகள் அஜித் அழகாக இருக்கிறார் என்று கூறுவதை விட அவரது நடிப்பு பிடித்திருக்கிறது என கூறுவது பிடிக்கும்.
அழகு எப்போதும் நிலைப்பது இல்லை என்று கூறியுள்ளார்.