'எனிமி'யை அடுத்து தெலுங்கிலும் வில்லனாக நடிக்கின்றாரா ஆர்யா?
விஷால் நடிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’எனிமி’ திரைப்படத்தில் நடிகர் ஆர்யா வில்லனாக நடித்த நிலையில் தற்போது தெலுங்கிலும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் லிங்குசாமி என்பது தெரிந்ததே. இவர் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ராம்பொத்தினேனி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் வில்லனாக நடிக்க மாதவன், அருண் விஜய் உள்பட ஒரு சிலரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஆர்யாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே லிங்குசாமி இயக்கத்தில் ’வேட்டை’ திரைப்படத்தில் ஆர்யா நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.
தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோவாக இருக்கும் ஆர்யா, விஷால் தனது நெருங்கிய நண்பர் என்பதற்காக ’எனிமி’ படத்தில் வில்லனாக நடித்தார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது தெலுங்கிலும் வில்லனாக அவர் நடிக்க உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.