பிரபாஸ் படத்தில் இணைந்த முன்னணி பாலிவுட் நடிகை - யார் தெரியுமா

பிரபாஸ் படத்தில் இணைந்த முன்னணி பாலிவுட் நடிகை - யார் தெரியுமா

கே.ஜி.எப் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். தற்போது இப்படத்தின் இராண்டாம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார்.

இவர் அடுத்ததாக பாகுபலி நடிகர் பிரபாஸை வைத்து ‘சலார்’ என்ற படத்தை இயக்குகிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக நடிகை சுருதிஹாசன் நடித்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள சலார் படத்தின் படப்பிடிப்பு, அடுத்த மாதம் மீண்டும் தொடங்க உள்ளது.

இந்நிலையில் சலார் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க பாலிவுட் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு.

ஆம், பிரபல பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான, வாணி கபூரை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. மேலும் நடிகை வாணி கபூர் நடிக்கும் முதல் தெலுங்கு படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES