'பாகுபலி' வெப்தொடர்: சிவகாமி வேடத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதில் இந்த நடிகையா?

'பாகுபலி' வெப்தொடர்: சிவகாமி வேடத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதில் இந்த நடிகையா?

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய ’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் இந்த இரண்டு திரைப்படங்களும் சேர்ந்து ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா இணைந்து நடித்து வரும் ’ஆர்.ஆர்.ஆர்.’ என்ற படத்தை இயக்கி வரும் ராஜமவுலி அடுத்ததாக ’பாகுபலி’ குறித்த ஒரு வெப்தொடரை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் இந்த வெப்தொடரை அவரே தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தன. நெட்பிளிக்ஸ் ஓடிடிக்காக தயாராகும் இந்த ’பாகுபலி’ வெப்தொடர் ரூ 200 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க திட்டமிட்டு உள்ளதாகவும், 9 எபிசோடுகள் கொண்ட இந்த தொடரின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ’பாகுபலி’, ‘பாகுபலி 2’ ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் கம்பீரமான சிவகாமி வேடத்தில் ரம்யாகிருஷ்ணன் நடித்து இருப்பார் என்பதும், அவரது நடிப்பு உலக அளவில் பேசப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ’பாகுபலி’ வெப்தொடரிலும் சிவகாமி கேரக்டரில் அவரே நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ’மாலை நேரத்து மயக்கம்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகை வாக்மா கேபி என்பவர் அந்த கேரக்டரில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News