லேடிசூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் தெலுங்கு ரீமேக் படம் குறித்த புது அப்டேட்!
மலையாளத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் "லூசிபர்". இந்தப் படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது என்றும் மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்த கேரக்டரில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருக்கிறார் என்பது போன்ற தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில் கொரோனா காரணமாக தடைப்பட்டு இருந்த சினிமா துறை தற்போது துரிதமாக இயங்கத் துவங்கி இருக்கிறது. அந்த வகையில் "லூசிபர்" படத்தின் இசையமைப்பு தற்போது துவங்கி இருப்பதாக இசையமைப்பாளர் தமன் தனது டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார். கூடவே "லூசிபர் படத்தின் இயக்குநர் மோகன் ராஜா உடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
மலையாளத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் "லூசிபர்". இந்தப் படத்தை நடிகர் பிருத்விராஜ் இயக்கி இருந்தார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், வில்லன் கதாபாத்திரத்தில் விவேக் ஓபராய், அவரது மனைவியாக மஞ்சு வாரியர், ஸ்டைலிஷ் அரசியல்வாதியாக டொவினோ தாமஸ் ஆகியோர் நடித்து இருந்தனர்.
வசூல் ரீதியாக ரூ.200 கோடி சாதனை படைத்த இந்தத் திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகி வருகிறது. இந்தப் படத்தில் கதாநாயகனாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கிறார். மேலும் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.