இனி இப்படி பண்ணாதீங்க - வருத்தத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா

இனி இப்படி பண்ணாதீங்க - வருத்தத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா

தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

சமீபத்தில் கார்த்தியின் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழிலும் கதாநாயகியாக அறிமுகமாகிவிட்டார்.

இவருக்கு தென்னிந்திய மாநிலங்களில் அதிக அளவிலான இளம் ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.

இந்நிலையில் ஆகாஷ் திரிபாதி என்ற ரசிகர், ராஷ்மிகாவின் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். பல்வேறு இடங்களில், ராஷ்மிகாவின் வீட்டு விலாசம் கேட்டு விசாரித்துள்ளார்.

 

இதனால் சந்தேகமடைந்த சிலர், இது குறித்து போலீசில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஆகாஷிடம் விசாரணை நடத்திய போலீசார், குடகு மாவட்டத்தில் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு அறிவுரை கூறி தெலங்கானாவுக்கு திருப்பி அனுப்பினர்.

இதனை அறிந்த நடிகை ராஷ்மிகா மந்தனா டுவிட்டர் பக்கத்தில் அந்த ரசிகருக்காக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், " என்னை காண்பதற்காக வெகு தூரம் பயணித்து எனது வீட்டிற்கு சென்றிருக்கிறீர்கள். தயது செய்து இனி இது போல் செய்ய வேண்டாம். உங்களை சந்திக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது.

இருப்பினும் ஒரு நாள் உங்களை நேரில் சந்திப்பேன் என நம்புகிறேன். அதுவரை உங்கள் இடத்தில் இருந்தே அன்பு செலுத்தினால் நான் மகிழ்ச்சி அடைவேன் " என்று ராஷ்மிகா குறிப்பிட்டுள்ளார்.

LATEST News

Trending News