நயன்தாராவுக்கு முத்தம் கொடுத்த புகைப்படம்: விக்னேஷ் சிவன் விளக்கம்

நயன்தாராவுக்கு முத்தம் கொடுத்த புகைப்படம்: விக்னேஷ் சிவன் விளக்கம்

நயன்தாராவுக்கு முத்தம் கொடுத்த புகைப்படம் குறித்த விளக்கம் அளித்த இயக்குனர் விக்னேஷ் சிவன் ’நான் பிசியாக இருக்கும்போது யாரோ ஒருவர் எடுத்த புகைப்படம்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ’நயன்தாரா குறித்து அனைவரும் உங்களிடம் கேள்வி கேட்கும்போது நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? என்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்த விக்னேஷ் சிவன் ’தனக்கு மிகவும் பெருமையாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார் 

மேலும் நயன்தாராவுக்கு பொருத்தமான உடை சேலை என்றும், நான் இதுவரை வாழ்க்கையில் சந்தித்த மிகவும் அருமையான மனிதர் என்றால் அது நயன்தாராவின் அம்மா தான் என்றும் அவருடன் எடுத்த புகைப்படமே தனக்கு மிகவும் விருப்பமான புகைப்படம் என்றும் மற்றொரு கேள்விக்கு பதில் அளித்துள்ளார் 

நயன்தாராவின் அழகு என்ன ரகசியம் என்ன என்று கேட்டபோது அவருடைய பக்தி தான் என்று கூறிய விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் இருக்கும் இடமே தனக்கு பிடித்தமான இடம் என்றும் கூறியுள்ளார். மேலும் தனக்கு நயன்தாரா நடித்ததில் தனக்கு பிடித்த படம் ’ராஜா ராணி’ என்றும் நயன்தாரா சமைத்த உணவுகளில் தனக்கு மிகவும் பிடித்தது நெய் சாதம் மற்றும் சிக்கன் கறி என்றும் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES